بسم الله الرحمن الرحيم
அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்டபோது அவர்கள் அடைந்த வேதனையை வெளிப்படுத்தும் அவர்களின் வார்த்தையிலிருந்து சிறு பகுதி;
'ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்" என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை.
ஹதீஸ் சுருக்கம், நூல்;புஹாரி,எண் 2661
அபாண்ட அவதூறால் உள்ளம் உடைந்து அழுது, அழுது கண்ணீர் வற்றும் அளவுக்கு அன்னையவர்கள் வேதனைப்பட்டுள்ளார்களே! அத்தகைய அவதூறை பரப்பியவர்களில் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்[ரலி] அவர்களும் ஒருவர். இதை மனதில்கொண்டு கீழுள்ள செய்தியை படியுங்கள்;
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்;
நான் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை ஏசிக் கொண்டே (என் சிற்றன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், 'ஹஸ்ஸானை ஏசாதே. ஏனென்றால், அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தரப்பிலிருந்து (எதிரிகளின் வசைக் கவிதைகளுக்கு) பதிலடி தருபவராய் இருந்தார்கள். (ஒரு நாள்) ஹஸ்ஸான் அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்து இணைவைப்பவர்(களான குறைஷி)களுக்கெதிராக வசைக் கவி பாட அனுமதி கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'பிறகு என்னுடைய வமிசாவளியை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், '(அவர்களைப் பற்றி நான் வசைக் கவி கூறும்போது) குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுத்து போன்று உங்களை உருவி எடுத்து விடுவேன்" என்று கூறினார். நூல்;புஹாரி,எண் 4145
தன்னைக்குறித்து அவதூறு பரப்பியவர்களில் ஒருவரை 'திட்டாதீர்கள்' என்று அன்னையவர்கள் பெருந்தன்மையோடு சொன்னார்களே! இந்த பண்பு நம்மிடம் இன்றைக்கு உள்ளதா? ஒருவன் தனக்கு எதிரான கருத்தை உரிய சான்றுகளுடன் சுட்டிக்காட்டினால் கூட, அவனது கருத்தை கருத்தால் எதிர்கொள்வதை விடுத்து, அவனை விட்டேனா பார்' என்று எதிரியின் பிறப்பிலிருந்து ஆய்வுசெய்து அவன் செய்த சிறிய/பெரிய தனிப்பட்ட தவறுகள் அத்துனையையும் பரப்புவது.
ஆனால், அருமை சஹாபாக்கள் இந்தவிசயத்தில் எப்படி மன்னிக்கும் தன்மையை கையாண்டுள்ளார்கள் என்பதற்கு அன்னை ஆயிஷா[ரலி] ஒரு அற்புதமான சான்றாக திகழ்கிறார்கள். இந்த பண்பு நமக்கு வந்துவிட்டாலே பாதி அவதூறு மறைந்துவிடும். நடுநிலையோடு சிந்திப்போம்! நன்மையை மட்டும் பரப்புவோம்.

மேலும், இவ்வாறு அவதூறுகள் நம்மில் பலர் மத்தியில் அதிகமானதுக்கு காரணம் 'என்னையே எதிர்க்க துணிந்து விட்டானா? என்ற ஆணவம் சிலருக்கு.
ஆனால், அருமை சஹாபாக்கள் இந்தவிசயத்தில் எப்படி மன்னிக்கும் தன்மையை கையாண்டுள்ளார்கள் என்பதற்கு அன்னை ஆயிஷா[ரலி] ஒரு அற்புதமான சான்றாக திகழ்கிறார்கள். இந்த பண்பு நமக்கு வந்துவிட்டாலே பாதி அவதூறு மறைந்துவிடும். நடுநிலையோடு சிந்திப்போம்! நன்மையை மட்டும் பரப்புவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக