வியாழன், 3 செப்டம்பர், 2009

மூஸா[அலை] அவர்களுக்கு ஹாரூன்[அலை] போன்று நபியிடத்தில் அந்தஸ்துடையவர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக் கொள்வதற்காக மதீனாவில்) அலீ(ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும் வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ(ரலி), 'குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னைவிட்டுச் செல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்), எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை'' என்று கூறினார்கள்.


ஆதாரம்;புஹாரி எண் 4416


இந்த பொன்மொழியில், எல்லோரும் போரில் பங்கெடுக்க, என்னை மட்டும் பெண்களையும்-குழந்தைகளையும் பாதுகாக்கும் சாதாரணt பணிக்காக விட்டு செல்கிறீர்களா? என்ற ரீதியில் அலீ[ரலி] அவர்கள் ஆதங்கப்பட, அதற்கு நபி[ஸல்] அவர்கள், மூஸா [அலை] அவர்களுக்கு ஹாரூன்[அலை] அவர்கள் இருந்த அந்தஸ்தில் என்னிடத்தில் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா என்று கேட்கிறார்கள். மூஸா[அலை] அவர்களிடத்தில் ஹாரூன்[aஅவர்களுக்கு இருந்த அந்தஸ்த்து என்ன? அல்லாஹ் கூறுகின்றான்;


وَوَاعَدْنَا مُوسَى ثَلاَثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً وَقَالَ مُوسَى لأَخِيهِ هَارُونَ اخْلُفْنِي فِي قَوْمِي وَأَصْلِحْ وَلاَ تَتَّبِعْ سَبِيلَ الْمُفْسِدِينَ
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழமை பெற்றது. அப்போது மூஸா தம் சதோதரர் ஹாரூனை நோக்கி, "நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!" என்று கூறினார்.[7:142 ]



மூஸா[அலை] அவர்கள் வேதத்தை பெற அல்லாஹ்வை நாடி சென்ற நேரத்தில் தனது கலீபாவாக எப்படி ஹாரூன்[அலை] அவர்களை நியமனம் செய்தார்களோ, அதுபோன்று தபூக் யுத்தத்திற்கு சென்ற நபி[ஸல்]அவர்கள் மதீனாவில் தனது பிரதிநியாக அலீ[ரலி] அவர்களை நியமித்து, எனக்கு பின்னால் நபியில்லை. அதேநேரத்தில் என்னிடத்தில், மூஸா[அலை]அவர்களுக்கு ஹாரூன்[அலை] அவர்களைப்போல் நீங்கள் அந்தஸ்த்தை பெற்றவர் என்று கூறுகிறார்கள் எனில், அல்லாஹ்வின் தூதர் அவர்களிடத்தில் அலீ[ரலி] அவர்களுக்குரிய மதிப்பையும் கண்ணியத்தையும் இதன்மூலம் புரியமுடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக