بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
இஹ்ராம் அணிந்த பின் நறுமணம் பூசக்கூடாது என்பது அனைவரும் அறிந்த விஷயமே! ஆனால் இஹ்ராம் அணிவதற்கு முன்பாக நறுமணம் பூசுவதற்கு எந்த தடையும் இல்லாத நிலையில், இப்னு உமர்[ரலி] அவர்கள் 'இஹ்ராமுக்கு முன்னால் நறுமணம் பூசுவது கூடாது என்று தீர்ப்பளித்து வந்தார்கள் என்று எழுதிவிட்டு அதற்கான எந்த ஆதாரத்தையும் முன் வைக்காமல் , சகாபாக்களை மட்டம் தட்டும் ஒரு நூலில் குறிப்பிட்டுவிட்டு, அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் இப்னு உமர்[ரலி] அவர்களின் நிலைப்பாட்டை மறுக்கும் மூன்று ஹதீஸ்களை குறிப்பிட்டுள்ளார்கள். அதில் ஒன்று கீழே;("நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை" என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறியபோது) 'அல்லாஹ் அப்துர் ரஹ்மானின் தந்தைக்கு ரஹ்மத் செய்வானாக! நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும்' என ஆயிஷா(ரலி) கூறினார்" என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.
ஆதாரம்;புஹாரி எண் 267
இந்த பொன்மொழியை கவனமாக படியுங்கள். இப்னு உமர்[ரலி] அவர்கள் இஹ்ராமுக்கு முன்னால் நறுமணம் பூசக்கூடாது என்று யாரையேனும் தடுத்ததாக அல்லது அப்படிப்பட்ட கேள்விக்கு தீர்ப்பளித்ததாக இருக்கிறதா? இல்லை. மாறாக, ("நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை"
என்று தன்னளவில் சொல்கிறார்கள். இது எப்படி மார்க்கத்திற்கு முரணாகும்..? மார்க்கம் அனுமதித்த ஒரு பொருளை தனக்கு விருப்பமில்லை என்பதால் தவிர்ந்து கொள்வது மார்க்க அடிப்படையில் ஹராமா? என்பதை சகாபாக்களை மட்டம் தட்டுபவர்கள் உரிய சான்றுகளுடன் முன்வைப்பார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக