بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்;இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்பட்டிருந்த போது) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் அதில், 'அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது - இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்" என்று கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்து) அழுதார்கள். 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுய அதிகாரம் அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?' என்று நாங்கள் வியப்படைந்தோம். இறைத்தூதர் தாம் அந்த சுயஅதிகாரம் அளிக்கப்பட்ட அடியார். (நபி - ஸல் - அவர்களின் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூ பக்ர் - ரலி - அறிந்து கொண்டார். ஏனெனில்,) அபூ பக்ர்(ரலி) எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராகஇருப்பவர் அபூபக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கின்றன. (என்னுடைய இந்தப்) பள்ளி வாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர" என்று கூறினார்கள்.
அதாரம்; புஹாரி எண் 3654
நபி[ஸல்] அவர்களின் மரண நேர்க்கத்தில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது யாரையும் சந்திப்பதை தவிர்க்கும் வகையில் வாசல்களை அடைக்குமாறு பணித்தபோது அதில் அபூபக்கர்[ரலி] அவர்களின் வருகைக்கான வாசலை அடைக்கவேண்டாம் என கூறி, தனக்கும்-அபூபக்கர்[ரலி] அவர்களுக்கும் உள்ள நெருக்கத்தை பறைசாற்றுகிறார்கள் எனில், இறைத்தூதரின் இதயம் கவர்ந்த அபூபக்கர்[ரலி] அவர்கள்தான் எத்துனை மகத்தானவர்கள்!
அல்லாஹ்வின் தூதர் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக. அவர்தம் உற்ற தோழர் அபூபக்கர் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
பதிலளிநீக்கு