நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கெடுத்தோம். அப்போது அவர்கள், 'நிச்சயமாக மதீனாவில் சில மக்கள் உள்ளனர். நீங்கள் சம தரையையோ,பள்ளத்தாக்கையோ கடந்து சென்றால் அவர்களும் (கூலி பெறுவதில் உங்களுடன் உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களைத் தடுத்து விட்டது' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி நூல்: புகாரி 2839, 4423
அன்பானவர்களே! சத்திய மாக்கத்தை நிலைநாட்டிட போருக்கு வாருங்கள் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைப்பு விடுத்த போதெல்லாம் சளைக்காமல் பங்கெடுத்து சரித்திரம் படைத்தவர்கள சஹாபாக்கள். ஒரு போர் முடிவுற்ற அடுத்த கணமே அடுத்த போர் என்று அழைப்பு விடுத்தாலும் அக்கணமே அயராமல் அல்லாஹ்வின் தூதரோடு அணிவகுத்தவர்கள் சஹாபாக்கள். உயிருக்குப் பயந்து கோழைகளாக வீட்டிலே முடங்கிக்கிடக்க மனதால் கூட நாடியதில்லை சஹாபாக்கள். ஆனாலும் மனிதர்கள என்ற முறையில் அவர்களுக்கும் நோய் போன்ற சோதனைகள குறுக்கிடும்போது அவர்களால் அறப்போரில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்ட போதும், அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் நிச்சயம் போரில் பங்கெடுக்க தயங்காத தூயவர்கள் என்பதால், அவர்களுக்கு போரில் பங்கெடுத்தோருக்கு வழங்கும் நன்மையை அல்லாஹ் வழங்குகிறான் என்றால், சத்திய சஹாபாக்களின் இஹ்லாஸ் எனும் மனத்தூய்மை பளிச்சிடுவதைக் காணலாம். அந்த வழியில் நாமும் அல்லாஹ்வின் பாதையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் திகழ உறுதி ஏற்போம் இறைநாடினால்.